Friday 3rd of May 2024 07:53:28 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் நேற்றும் 700 இற்கு மேற்பட்டோருக்கு தொற்றுறுதி!

இலங்கையில் நேற்றும் 700 இற்கு மேற்பட்டோருக்கு தொற்றுறுதி!


இலங்கையில் நேற்றைய தினமும் 700 இற்கு மேற்பட்டோருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான மேலும் 211 பேர் நேற்று (நவ-25) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள பிந்தி அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று 529 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 740 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 560,345 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 471 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 528,400 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து தற்போது சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,713 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் கொரோனாத் தொற்று காரணமாக மேலும் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 14,232 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE